பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை – முதல்வர் ஸ்டாலின் டிவிட்..

சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை  செலுத்தப்பட்டது. அத்துடன்  முதல்வர் மு.க. ஸ்டாலின் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் 132ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அரசு மரியாதை செய்யபட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “நான்தான் திராவிடன்” என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்! வான்தான் என்புகழ்! என இடியென முழங்கிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் பழமைவாதம் ஒழித்து இனமானம் காக்கச் சூளுரைப்போம்! என தெரிவித்துள்ளார்.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாவேந்தர் பாரதிதாசன்.  ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று முழங்கிய பாரதிதாசனின்  132ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அரசு மரியாதை செய்யபட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.