எஸ்.ஜே.சூர்யா – லைலா நடிக்கும் வெப் சீரிஸ் : புஷ்கர்-காயத்ரி இயக்குகிறார்கள்
விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி தம்பதிகள் அடுத்ததாக வதந்தி என்ற வெப் சீரிசை இயக்குகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, லைலா நடிக்கிறார்கள். மும்பையில் நேற்று நடந்த விழாவில் இது அறிவிக்கப்பட்டது. இந்த சீரிஸில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் லைலா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த வெப் சீரிசில் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இது.