
வெப்சீரிஸில் விஜய் சேதுபதி
சமந்தா நடித்த பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்து இயக்கும் புதிய வெப் தொடர் பர்ஜி. இந்த தொடரில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ராஷி கண்ணா, ரெஜினா, கேகே மேனன், அமோல் பலேகர், உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இது ஒரு திருடன் போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஒரு திருடனுக்கும், திறமையான ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சதுரங்க ஆட்டம் தான் கதை என்கிறார்கள். விஜய்சேதுபதி பேமிலி மேன் 2 தொடரிலேயே நடிக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலையில் அவர் மறுத்து விட்டார். அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் மைம்கோபி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.