ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் சிறுத்தை ஒன்று சாலையில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஹைதராபாத் நகரத்தில் உள்ள சங்கரெட்டியின் தொழிற்பேட்டையில் உள்ள ஹெட்டோரோ லேப்ஸ் ஆலைக்குள் சிறுத்தை ஒன்று நுழையும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அங்கு பணியாற்றும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சியில், சிறுத்தை இரவில் சாலையை கடக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
