டீசரே இப்படி என்றால் மெய்ன் பிக்சர் எப்படியிருக்கும்?: மிரட்டும் ’பிசாசு 2’ டீசர்

‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2′ படப்படிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பெங்களூரில் நிறைவுற்றன. வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின், தெலுங்கு உரிமையை ‘விஜய் 66’ இயக்குநர் தில்ராஜு கைப்பற்றியுள்ளார்.

image

இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் டீசர் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. பேய் படங்கள் என்றாலே ரசிகர்களை பயமுறுத்தும். ஆனால், ‘பிசாசு’ படத்தில் பேயாக நடித்த பிரக்யா ரசிகர்களின் பிரியங்களை அள்ளிக்குவித்த பேயாக மாறினார். அந்தளவிற்கு நடிப்பாலும் அழகாலும் ரசிக்க வைத்தார்.

இப்படத்தில், மென்மையாக பயமுறுத்தியிருந்த மிஷ்கின், ‘பிசாசு 2’ வில் ஹார்ட் பீட் எகிறவைக்கும் அளவுக்கு டீசரில் மிரட்டியிருக்கிறார். பெண்ணின் யோனியுடன் சுவற்றில் தொங்கும் ஓவியத்துடன் டீசர் துவங்குகிறது. இருட்டில் தனியாக ஊஞ்சலில் ஆடும் ஆண்ட்ரியா, உருகும் மெழுகுவர்த்தி, மேகங்கள் கலையும் நிலா என ஒவ்வொரு காட்சியும் இதயத்தை நடுநடுங்க வைக்கிறது. வசனங்களே இல்லாத பிசாசுக்கு தனது இசையாலேயே குரல் கொடுத்து ’பிசாசு 2’வின் ‘ரியல் பிசாசு’ என்று சொல்லும் அளவிற்கு மிரட்டியுள்ளார் கார்த்திக் ராஜா. யோனியுடன் காட்டப்படும் பெண்ணின் ஓவியம், ஆண்ட்ரியா ஒருவனை வெறிகொண்டு வெட்டுவது போன்றவை பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் பேய் கதையாக இருக்குமோ என்ற யூகத்தையும் ஏற்படுத்துகிறது.

விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார். டீசரே இப்படி என்றால் மெய்ன் பிக்சர் எப்படி மிரட்டுமோ என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.