`மல்பெரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ₹5.25 கோடி ஒதுக்கீடு!' – தா.மோ.அன்பரசன்

சட்ட மன்றத்தில் நேற்று பட்டுவளர்ச்சி மற்றும் கைவினைப்பொருட்கள் தொடர்பான அறிவிப்புகளை குறு,சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டார்.

“அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் 5,000 ஏக்கருக்கு ரூ.5 கோடியே 25 லட்சம் நிதியதவி வழங்கப்படும்.

தா.மோ.அன்பரசன்

நிலையான நீடித்த வருமானம் பட்டு வளர்ப்பில் கிடைப்பதால் விவசாயிகள் பலரும் பட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டு வளர்ப்பை ஊக்குவிக்க அரசு தரப்பில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் பட்டு வளர்ப்பில் ஈடுபடும் 500 விவசாயிகளுக்கு, தனி பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்க சுமார் 6 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

பவர் டில்லர் வாங்கு வதற்காக 300 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.35,000 வீதம் ரூ.1 கோடியே 5 லட்சம் வழங்கப்படும்” என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.