கோலிவுட் ஸ்பைடர்: சூர்யா படத்தை இயக்கும் `அயலான்' இயக்குநர்; உதயநிதியால் தமிழ்த் திரையுலகம் அப்செட்?

* விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெற்றியா, தோல்வியா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்தாலும், படத்தின் தமிழ்நாடு கலெக்‌ஷன் மட்டும் 85 கோடி என வசூல் நோட்டை இன்னொரு பக்கம் நீட்டுகிறார்கள். ஆனால், விஷயம் இதுவல்ல. ‘பீஸ்ட்’ படத்திற்குக் கிடைத்த நெகட்டிவ் கமென்ட்களால் செம அப்செட்டில் இருக்கிறார் விஜய். விளைவு, இதற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு நெகட்டிவ் கமென்ட்டுகள் ஏன் வந்தன, தன் மீது மட்டும் எதற்காக இவ்வளவு வெறுப்புணர்வு என்பது குறித்து எண்ணிய விஜய், இதற்காக டிடெக்ட்டிவ் டீம் ஒன்றிடம் விசாரிக்கச் சொல்லி அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம்.

பீஸ்ட்

* உதயநிதியின் மீது ரொம்பவும் கோபத்தில் இருக்கிறார்கள் திரையுலகினர். குறிப்பாக விநியோகஸ்தர்கள். இப்போது வெளியாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அடுத்து ‘டான்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘விக்ரம்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து இரண்டு வார இடைவெளிகளில் தியேட்டர்களுக்கு வருகின்றன. எல்லாமே ரெட் ஜெயன்ட் வெளியிடும் படங்கள் என்கிறார்கள். ஆக, ஜூன் வரை தியேட்டர்கள் எல்லாம் உதயநிதி கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், சின்னப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது என்கிறார்கள். அடுத்தடுத்த முக்கியமான படங்களை ரெட் ஜெயன்ட் தொடர்ந்து வாங்கி ரிலீஸ் தேதியும் அறிவித்து விடுவதால் இந்தச் சிக்கல் என்கிறார்கள்.

* சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டாலும், அது ஏலியன் கதை என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருக்கின்றன. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பல மாதங்களுக்கு முன்னரே துவக்கப்பட்டு விட்டாலும், இன்னமும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெறாமலேயே இருக்கிறதாம். அதற்கு இவ்வளவு செலவு வைக்கும் எனப் படக்குழு நினைக்கவில்லை. லட்சங்கள் தண்ணீராக செலவு ஆகிக்கொண்டிருப்பதால், கிராபிக்ஸ் பணிகளை நிதிநிலை காரணமாக நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே படத்தின் இயக்குநர் அடுத்து சூர்யாவை வைத்து இயக்க உள்ளார். அதன் கதைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

பிரியங்கா மோகன்

* பிரியங்கா மோகன் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி சேருகிறார். எம்.ராஜேஷ் ஜெயம் ரவியை வைத்து இயக்கும் இப்படத்தில் நடிக்க பிரியங்கா மோகனிடம் பேசி வருகிறார்கள்.

* ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமாரின் ‘குலுகுலு’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்து நடிக்கும் படத்திற்குச் சென்றுவிட்டார் சந்தானம். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னடத்தின் பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கிறார். பெங்களூருவில் பூஜையோடு, படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை, பேங்காக், லண்டன் நகரங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

* நடிகராக முழு வீச்சில் இறங்கி அடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘மாநாடு’ படத்திற்கு பின் வில்லனாக நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், கவனமாக செலக்ட் செய்து நடிக்கிறார். ஹீரோவாக தமிழில் ‘பொம்மை’, ‘கடமை செய்’ படங்களை முடித்துவிட்டார். இப்போது ஷங்கர் – ராம்சரணின் படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், வெப்சீரீஸ் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் நடக்கும் அதன் படப்பிடிப்பில் இப்போது பரபரக்கும் அவர், விஷாலின் ‘மார்க் ஆண்டனி’யில் டபுள் ஆக்ட்டில் நடிக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா

* தன் திரைக்கதைக்காகவே பேசப்பட்டவர் அந்த இயக்குநர். பல குறும்படங்களை இயக்கி, அதன் மூலம் புகழடைந்து பின்னர் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர். கடந்த சில வருடங்களாக படம் டைரக்‌ட் செய்வதற்கு பிரேக் கொடுத்துவிட்டு, பிரபல இயக்குநர்களின் படங்களின் கதை விவாதங்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி, அதன் மூலம் கணிசமாகச் சம்பாதித்தும் வருகிறார். எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என்பது போல, சமீபமாக அவர் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராகவும் மாறியிருக்கிறார். மாறியதோடு மட்டுமல்லாமல் மூன்றெழுத்து ஹீரோ படத்தையும் இயக்க உள்ளதாகக் கூறி, அதற்காக உதவியாளர்களையும் சேர்த்துக்கொண்டார். ஆனால், மாதங்கள் பல ஆகியும் அவர் படம் இயக்கிய பாடில்லை. உதவியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சாப்பாடு மட்டுமே போட்டு வேலைகளை வாங்கி வந்ததில், கடுப்பான உதவி இயக்குநர் ஒருவர் தனியாக படம் பண்ணப் போவதாக இயக்குநரிடம் கூறியிருக்கிறார். அவ்வளவுதான் இயக்குநருக்கு கோபம் வந்துவிட்டதாம். ”தினம் தினம் சோறுபோட்டேனடா… நன்றி கெட்டவங்கவடா…” எனச் சகட்டு மேனிக்கு வசவு பாடி, அந்த உதவி இயக்குநரை கதறி அழவைத்ததுடன் “‘ஶ்ரீராம ஜெயம்’ ஆயிரம் முறை எழுதி கொடுத்துவிட்டுப் போ…” என ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார். இயக்குநரின் சாபம் பொறுக்க முடியாமல் அந்த உதவி இயக்குநரும் குருநாதரின் கட்டளையை நிறைவேற்றிவிட்டுத் திரும்பியிருக்கிறார். கோடம்பாக்கமே இயக்குநரின் இந்தச் செயலைச் சொல்லி ‘க்ளுக்கென’ சிரிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.