கார்த்தியின் ‘
சர்தார்
’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய
பி.எஸ்.மித்ரன்
இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார்’.
இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர்
கார்த்தி
நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில்
ராஷி கண்ணா
மற்றும் ரெஜிஷா விஜயன் என இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
மரண பயம் தெரியுதே: அஜித் ரசிகர்களை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!
ஜிவி
பிரகாஷ் இசையமைத்து வருகிறார். புதிய கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பணிகளை வேகப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!