Indian Express Tamil’s Twitter space: பள்ளிக்கூடம் ஒருவருக்கு அடிப்படைக் கல்வியை கற்பிக்கும் இடமாக மட்டுமல்லாமல், தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தெடுக்கும் தளமாக இருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் செய்திகள், பள்ளிகள் உண்மையிலே ஒழுக்கத்தையும் கற்பிக்கும் இடமாக இருக்கிறதா என்பதில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகள் தொடர் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றன.
சமீபத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரைத் தாக்குவது போன்றும், பள்ளி டேபிள், பெஞ்சுகளை உடைப்பது போன்றும் காணொளிகள் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அரசுப் பள்ளிகளும் அதில் கல்வி கற்கும் மாணவர்கள் எதனால் இப்படி தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்?, அவர்கள் மட்டும் இதுபோன்ற சிக்கலான பிரச்சனைகளில் எப்படி சிக்கிக் கொள்கிறார்கள்?, அரசுப் பள்ளி மாணவ – மாணவிகள் மட்டும் ஏன் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார்கள்?, மற்றும் இது போன்ற பிரச்னைக்கு என்ன தீர்வாக இருக்கலாம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு நமது “இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்” ட்விட்டர் ஸ்பேஸில் நடத்திய விவாதம் மூலம் விடையளிக்க முயன்றோம்.
இந்த ட்விட்டர் ஸ்பேஸில் சமூக செயற்பாட்டாளர் சுப. உதயகுமாரன், முன்னணி மனநல மருத்துவர் டாக்டர் சி பன்னீர் செல்வன், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே இளமாறன் போன்றோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு விவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஜனார்தன் கௌஷிக் தொகுத்து வழங்கினார்.
ட்விட்டர் ஸ்பேஸ் விவாத லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது.
Set a reminder for our upcoming Space! #IETamilSpace @TamilSpaces @TwitterSpaces https://t.co/Cj0Jb1OzK0
— Indian Express Tamil (@IeTamil) April 28, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“