IMF நிதியத்துடன் எதிர்வரும் 2 மாதங்களில் ஆரம்ப உடன்பாL ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தக சபை கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொள்கை மாற்றத்துக்கு மத்தியில் நிதியின் மூலம் சிறப்பான எதிபார்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இலங்கை கடந்த 12 ஆம் திகதி வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை உள்ளூர் நாணயம் அல்லது அமெரிக்க டொலர் தொடர்பில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என்றார்.
அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கை சர்வதேச நாணய நிதிய சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.