ஓரே நாளில் ரூ.84,000 கோடி.. அடித்தது ஜாக்பாட்.. குத்தாட்டம் போடும் மார்க் ஜூக்கர்பெர்க்..!

உலகின் மிகப்பெரிய சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. சற்றும் எதிர்பார்க்காத வகையில் மெட்டா குழு சேவைகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மெட்டா பங்குகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இதன் வாயிலாக ஓரே நாளில் மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலர் அதாவது 84000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

மொட்ட வாடிக்கையாளர்கள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற உலகின் முன்னணி சமுக வலைத் தளங்களைக் கொண்டுள்ள மார்க் ஜூக்கப்பெர்க்-ன் மெட்டா பிளாட்பார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை டிக்டாக், யூடியூப் ஆதிக்கத்தின் காரணமாகச் சரிந்துள்ளது எனப் பிப்ரவரி மாதம் மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்தார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

இந்த அறிவிப்புக்குப் பின்பு அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் பார்த்திடாத வகையில் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் மெட்டா பிளாட்பார்ம்ஸ் ஓரே நாளில் சுமார் 200 பில்லியன் டாலருக்கு அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதனால் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பும் சரிந்தது.

 காலாண்டு முடிவுகள்
 

காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டில் மெட்டா நிறுவனத்தின் தினசரி ஆக்டிவ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.96 பில்லியன் ஆகவும், மாதாந்திர ஆக்டிவ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2.94 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சராசரியாக ஒரு வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் 9.54 டாலராக அதிகரித்து மொத்த வருவாய் 27.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மெட்டா பங்குகள் 17.6% உயர்வு

மெட்டா பங்குகள் 17.6% உயர்வு

இதன் எதிரொலியாக மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க். பங்குகள் வியாழனன்று 17.6% உயர்ந்தது, இந்தத் தடாலடி உயர்வுக்கு முதலும் முக்கியமான காரணமாக விளங்குவது காலாண்டு முடிவுகள் தான். மேலும் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, 37 வயதான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

12வது இடம்

12வது இடம்

இதுவரை இல்லாத வகையில் மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு நாளில் அதிகப்படியான உயர்வாக இது விளங்குகிறது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜூக்கர்பெர்க்கின் ஆறு இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்ததுள்ளார்.

 மெட்டாவில் நிலை

மெட்டாவில் நிலை

வியாழக்கிழமை உயர்வுக்குப் பின்பும், இந்த ஆண்டு உச்சத்தில் இருந்து மெட்டா பங்கு இன்னும் 39% குறைவாகவே உள்ளது. 2022 முதல் நான்கு மாதங்களில் ஜுக்கர்பெர்க்கின் $49.6 பில்லியன் சொத்து வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mark Zuckerberg wealth Soars By 11 billion dollar in a single day

Mark Zuckerberg wealth Soars By 11 billion dollar in a single day ஓரே நாளில் ரூ.84,000 கோடி.. அடித்தது ஜாக்பாட்.. குத்தாட்டம் போடும் மார்க் ஜூக்கர்பெர்க்..!

Story first published: Friday, April 29, 2022, 20:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.