காஷ்மீர் பற்றி பேச பாகிஸ்தானுக்கு தகுதியில்லை; மத்திய அரசு| Dinamalar

புதுடில்லி : ‘ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து பேச பாகிஸ்தானுக்கு தகுதியில்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி ஜம்மு – காஷ்மீர் சென்று, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார். இதை ‘மோடி நடத்திய நாடகம்’ என, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நம் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:காஷ்மீர் சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பும், வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைத்த காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

latest tamil news

பிரதமரின் காஷ்மீர் பயணம் குறித்து கேள்வி எழுப்புவோருக்கு, அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களே பதிலாக இருக்கும். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து கருத்து தெரிவிக்க பாக்.,கிற்கு அருகதையில்லை. பதில் அளிக்கக் கூடிய அளவிற்கு அந்த கேள்வியும் தகுதியுடையவரிடம் இருந்து வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.