பாரதிய ஜனதா கட்சி சரியான சித்தாந்தத்துடன் சரியான திசையில் நகரும் கட்சி என்றும், பா.ஜ.க.வுடன் போட்டியிட விரும்புபவர்கள் 50 முதல் 60 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜே.பி.நட்டா, “பாஜக சரியான சித்தாந்தத்துடன் சரியான திசையில் செல்கிறது, எங்கள் கட்சியுடன் போட்டியிட விரும்பும் எவரும் 50-60 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.
மேலும், ” குஜராத்தில் எனக்கு கிடைத்த இந்த வரவேற்பு எனக்கானது அல்ல, பா.ஜ.,வின் சித்தாந்தத்துக்கானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கானது. பாஜகவின் சித்தாந்தம், இந்தியா மட்டுமின்றி, உலகளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. பாஜகவால் நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது” எனத் தெரிவித்தார்
அகமதாபாத் வந்தடைந்த ஜே.பி.நட்டாவுக்கு கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க:`திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது முக்கியம்’- பா.ரஞ்சித் பேட்டி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM