மும்பையில் சொகுசு வீடுகள் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ரூ.10 கோடிக்கு மேலான வீடுகளின் விற்பனை மும்பையில் தொடர்ந்து உயரந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மும்பையில் மட்டும் 1214 சொகுசு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் மதிப்பு ரூ20,255 கோடியாகும். 2018-ம் ஆண்டில் 598 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.9,872 கோடி மட்டுமே.
சொகுசு வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டில் சிறப்பாக இருந்தது. லண்டன், துபாய், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு இணையாக மும்பையிலும் விற்பனை இருந்ததாக இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் வோர்லி, லோவர் பரேல், பாந்திரா, பிரபா தேவி மற்றும் அந்தேரி ஆகிய பகுதிகளில் சொகுசுவீடுகளின் விற்பனை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மும்பையில் விற்பனையான சொகுசு வீடுகளில் 20 சதவீதம் அளவுக்கு வோர்லி பகுதியில்தான் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனையான வீடுகளில் 848 வீடுகள் புதிய வீடுகள்.
இதேபோல பூனேவில் சொகுசு வீடுகளின் விற்பனை உயர்ந்திருக்கிறது. ரூ. 5 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 208 வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.1,407 கோடி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM