சென்னை: 9,26,583 ஆண்கள், 12,58,616 பெண்கள், 129 திருநங்கைகள் என குரூப்-4 தேர்வு எழுத 21,85,328 பேர் விண்ணப்ப விண்ணப்பித்துள்ளனர் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே இந்த தேர்வுக்கு தான் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளது. இதற்கு முன், 2017-ம் ஆண்டில் 20,76,200 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்தது.