தலைமைச்செயலாளரின் ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் தமிழக அரசின் சிறந்த நூலாக தேர்வு! பரிசையும், பாராட்டையும் பெருந்தன்மையாக மறுத்த இறையன்பு…

சென்னை: தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் சிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆகியோருக்கு நாளை நடைபெறும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அதை ஏற்க இறையன்பு மறுப்பு  தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு சார்பில் தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி, வெளிவந்த நூல்களில், போட்டிக்கு வரப்பெற்று தெரிவுக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் மற்றும் அதன் பதிப்பகத்தார்களக்க பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2018ம் ஆண்டு வரப்பெற்ற நூல்களில் சிறந்த நூலாக தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு ஐஏஎஸ் எழுதிய மூலைக்குள் சலவை என்ற நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தலைமைச்செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதைக்கண்ட தலைமைச் செயலாளர், தான் அரசு பொறுப்பில் இருப்பதால், தமிழக அரசின் விருதையும், பரிசுத்தொகையும் ஏற்க மறுத்து, தமிழ்வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,  தனது நூலான மூளைக்குள் சுற்றுலா எனும் தலைப்பிலான நூலை சிறந்த நூலாக தேர்வுக் குழுவினர் தேர்தெடுத்து நாளை நடைபெற இருக்கும் அரசு விழாவில், பரிசு பெற அழைக்கப்பட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2021ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தெரிவு செய்யப்பட்ட எனது படைப்பிற்கு, இவ்வாண்டு நடைபெறும் விழாவில் தலைமைச்செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல். எனவே எனது படைப்பிற்கு வழங்கப்பெறும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்த நிலையில், தலைமைச் செயலாளராக பதவி வகித்து வருவதால் பரிசையும், பாராட்டையும் ஏற்க மறுத்துள்ள இறையன்புவின் செயல் பாராட்டப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.