தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் 4 ஆம் தேதி கூட உள்ளது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இம்மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலுரை வழங்கினார்.
நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் விடுமுறை தினமாகும். மே 2ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் இல்லை. மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை. எனவே, நான்கு நாட்களுக்கு, சட்டப்பேரவைக் கூட்டம் கிடையாது.
மீண்டும் மே 4ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளது. அன்றைய தினம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.