Tamil Serial Baakiyalakshmi Rating Update With Promo : என்ன ராதிகா நீங்க இப்படி இருக்கீங்களே… டீச்சர்னு சொல்லும்போதெல்லாம் கோபி கடுப்பா இருக்காரு அப்படினா எதோ பிரச்சினை இருக்குனுதானே அர்த்தம் அதை ஏன் யோசிக்க மாட்றீங்க… அப்படி யோசிச்சா கோபி மாட்டிக்குவாரேனு டைரக்டர் சொன்னாரா?
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் வாழ்க்கையில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ள இந்த சீரியல், திருமணத்திற்கு மீறிய உறவிற்கும் இல்லத்தரசியின் வாழக்கை போராட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காதலியுடன் பழகி வரும், கோபி பாக்யாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறான். இதில் பாக்யாவுடன் டைவர்ஸ் வாங்குவதற்காக ஒருமுறை கோர்ட்டுக்கு சென்றார்கள் அது என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
அடுத்து கோபி அடிக்கடி மாட்டிக்கொள்வது போல், ப்ரமோ போட்டு எபிசோட்டில் ஏமாற்றுவதை தொழிலாக வைத்துள்ளனர். எப்படியும் கோபி மாட்டிக்கொள்ள மாட்டார் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் ஏன் இப்படி ப்ரமோ வருகிறது என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
இப்படி இருக்கும்போது ராதிகாவுக்கு சாப்பாடு செய்து கொடுக்க போய் பாக்யா பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். இதனால் கோபி, சமையல் வேலை வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர். அதன்பிறகு ராதிகா வற்புறுத்தியதால் நானே போய் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சொல்லி கோபி வீட்டுக்கு போய் ராதிகாவிடம் சமையல் வேலை தொடர் செய்ய சொல்கிறான்..
டீச்சர் பெயரை கேட்டாளே கடுப்பாகும் கோபி இதற்கு மட்டும் எப்படி டீச்சர் வீட்டுக்கு சென்றார் என்று ராதிகாவும் யோசிக்கவில்லை. கோவிலில் ராதிகாவிடம் சொன்ன உடனே கணவர் இப்படி வந்து கொல்கிறாரே அப்போ ராதிகாவுக்கு இவருக்கும் பழக்கம் இருக்குமா என்று பாக்யாவும யோசிக்கவில்லை.
இவர்கள் இருவரும் சொந்தமாக யோசத்தால் சீரியல் முடிந்துவிடும் என்பதாலோ என்னவோ இயக்குனரின் யோசனையை அப்படியே காட்சியாக காண்டு வருகினறனர். சாதாரண மக்களின் வாழ்வியலை சீரியலாக எடுக்கிறொம் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் பார்ப்பதுதான் சின்னத்திரை ரசிகர்கள் வாங்கி வந்த வரம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“