பொதுவாக கடன் வளர்ச்சி விகிதம் என்பது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். இது நாட்டின் பணப்புழக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது மேம்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் கடன் வளர்ச்சி விகிதமானது 11 – 12 சதவீதம் வளர்ச்சி காணலாம் என்று கிரிசில் அறிக்கை அறிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 7% ஆக வளர்ச்சி காணலாம் எனவும் கிரிசில் மதிப்பிட்டுள்ளது.
கிரிசில் ஆய்வறிக்கையில் கார்ப்பரேட் கடன் வளர்ச்சி விகிதமானது இருமடங்கு அதிகரித்து 8 – 9 சதவீதமாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.
பலனடையபோகும் துறைகள்
இந்த கடன் வளர்ச்சியில் மத்திய அரசின் பி எல் ஐ திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 13 துறைகள் அதிக பலனடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக மெட்டல்ஸ் மற்றும் மெட்டல் பொருட்கள், கெமிக்கல்கள், இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் அடங்கும்.
2021ல் சரிவு ஏன்?
கடந்த 2021ம் நிதியாண்டில் கார்ப்பரேட் கடன் வளர்ச்சியானது எதிர்மறையான வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக நிறுவனங்கள் முடங்கியிருந்த நிலையில், கடன் வழங்குவதில் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தான் கார்ப்பரேட் துறையில் சரிவினைக் கண்டு காணப்பட்டது.
MSME & வீட்டுக் கடன் வளர்ச்சி
இந்த கடன் வளர்ச்சி விகிதமானது குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி விகிதமானது, 12 – 14 சதவீதம் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கடன் வளர்ச்சி விகிதத்தில் வீட்டுக் கடன் வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கலாம். நடப்பு ஆண்டில் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், மக்கள் வீடு வாங்குவதிலும் ஆர்வம் காட்டலாம். இதுவும் கடன் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். மொத்தத்தில் சில்லறை கடன் வளர்ச்சி விகிதமானது 14 – 15% ஆக இருக்கலம் என்றும் கிரிசில் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
விவசாய துறையில் கடன் வளர்ச்சி
விவசாய துறையிலும் கடன் வளர்ச்சி விகிதமானது வலுவாக இருந்து வருகின்றது. நடப்பு ஆண்டும் பருவ மழை சராசரியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் கடன் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் வளர்ச்சி காணலாம்
ஆக ஒட்டுமொத்தத்தில் இந்திய வங்கித் துறையானது நடப்பு ஆண்டில் வலுவான வளர்ச்சி விகிதத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் வாராக்கடன் விகிதமும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் வங்கி வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bank credit growth to hit 4 year high of 11 -12% in current fiscal year: crisil
Bank credit growth to hit 4 year high of 11 -12% in current fiscal year: crisil/வாரிக் கொடுக்கும் வங்கிகள்.. 4 ஆண்டுகளில் இல்லாதளவு 11 -12% வளர்ச்சி இருக்கலாம்..!