’அஜித் 61’ படத்தில் அஜித் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், தபு நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமக்கிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கக கடந்த ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கை படக்குழு அமைத்து வந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், அஜித் இப்படத்தில் வில்லன் – ஹீரோ என டபுள் ரோலில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டில் லுக்கையும் வெளியிடவுள்ளனர்.
ஏற்கனவே, ‘வாலி’, ‘வரலாறு’, ’வில்லன்’, ‘சிட்டிசன்’, ‘அசல்’, ‘அட்டகாசம்’,’பில்லா’ என அஜித் நடித்தவற்றில் சில டபுள் ரோல் படங்கள் அவரது சினிமா கேரியரில் வரலாறு படைத்ததால் ’ஏகே 61’ படமும் டபுள் ட்ரீட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.