40 ரஷ்ய விமானங்கள்… தனியொருவராக புடினுக்கு மரண பயம் காட்டிய உக்ரேனிய வீரர் மரணம்


ஒரே நாளில் உலக நாடுகளின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய Ghost of Kyiv என அறியப்பட்ட உக்ரேனிய வீரர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு குழந்தைக்கு தந்தையான 29 வயது Major Stepan Tarabalka மார்ச் மாதம் 13ம் திகதி ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய துருப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மேஜர் ஸ்டீபன் தாராபால்கா தமது MiG-29 போர் விமானத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய முதல் நாளில் 6 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தி, உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் மேஜர் ஸ்டீபன் தாராபால்கா.

ஆனால், அவரது அடையாளம் அல்லது, பெயர், புகைப்படம் உள்ளிட்ட எதுவும் உக்ரைன் தரப்பில் வெளியிடப்படாத நிலையில், அப்படியான ஒரு துணிச்சல் மிக்க நபர் இல்லை எனவும், உக்ரேனிய போர் வீரர்களுக்கு ஊக்கமூட்ட கட்டமைக்கப்பட்ட கதை தான் Ghost of Kyiv எனவும் கூறப்பட்டது.

தற்போது அவரது அடையாளம் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு, அவர் இதுவரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளது உக்ரைன்.

மேலும், அவர் பயன்படுத்திய தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பக்கண்ணாடி உள்ளிட்டவைகளை லண்டனில் ஏலத்தில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் நாட்டின் உயரிய விருதும் அவருக்கு அளிக்கப்பட உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தலைநகர் கீவ்வை தனியொருவராக பாதுகாத்து வந்தவர் மேஜர் ஸ்டீபன் தாராபால்கா என கூறப்படுகிறது.

முதல் நாளில் 6 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய மேஜர் ஸ்டீபன் தாராபால்கா, மொத்தம் 40கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுவரை ரஷ்ய துருப்புகளுக்கு மரண பயம் காட்டி வந்த மேஜர் ஸ்டீபன் தாராபால்கா கொல்லப்பட்டுள்ள தகவல், உக்ரைன் துருப்புகளுக்கு பேரிடி என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.