பஞ்சாப் மாநிலத்தில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததால், போலீசார் வானில் துப்பாக்கியால் சுட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
பாட்டியாலா நகரில், சிவ சேனா அமைப்பை சேர்ந்த சிலர், போலீசாரின் அனுமதி பெறாமல், காலிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக முழக்கமிட்டபடி பேரணி சென்றனர்.
அப்போது காலிஸ்தானுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும், கையில் வாளுடன் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.