ஜி.வி.பிரகாஷ்
மற்றும் ரவிஅரசு கூட்டணியில் உருவாகியுள்ள
ஐங்கரன்
படத்தின் புதிய
ரிலீஸ்
தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிபடத்தின் மூலம் பிரபலமான ரவிஅரசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐங்கரன்’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். காமன்மேன் பிரசன்ஸ்
பி.கணேஷ்
தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மரண பயம் தெரியுதே: அஜித் ரசிகர்களை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!
இப்படத்தில்
மகிமா நம்பியார்
கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2018-ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டே தயாரான போதிலும் வெளியாகாமல் இருந்து வந்ததது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்த படத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புதிய ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை.
இதையடுத்து சிக்கல் தீர்த்ததை அடுத்து இன்று புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மே மாதம் 5-ஆம் தேதி வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷே, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!