சுவையான பலாப் பழம்: எப்படி பார்த்து வாங்குறது? எப்படி கட் பண்றது?

முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். அதிக இனிப்பு சுவை கொண்ட இந்த படம் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பலா படம் மட்டும்லலாமல் , பழுக்காத பலாகாயும் பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

வைட்டமின்கள் ஏ மற்றும் சி, தயாமின், ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், துத்தநாகம் மற்றும் நியாசின் போன்றவற்றின் ஆற்றல் மிக்கது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அறியப்படுகிறது.

உட்புறம் சதைப்பற்றுள்ள மற்றும் வெளியில் முட்கள் நிறைந்த பலாப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது. இருப்பினும், பலர் சரியான பழத்தை தேர்ந்தெடுத்து அதை சமையலுக்கு வெட்டுவது கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதை செய்வதற்கு சரியான எளய செயல்முறை ஒன்று உள்ளது.

நீங்கள் பலாப்பழத்தை விரும்புகிறீர்கள் என்றால், அதை வாங்கும்போதும் வெட்டும்போதும் மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்.

பலாப்பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

பலாப்பழத்தின் தோலை மெதுவாக அழுத்தி கைகளால் உணரவும். அது பழுத்திருந்தால், தோல் மென்மையாக இருக்கும்.

பழம் பழுத்திருக்கிறதா என்பதைச் சரிபார்க்க மற்றொரு வழி, அதை மெதுவாகத் தட்டுவது. வெற்று, மந்தமான சத்தம் கேட்டால், அது பழுத்துவிட்டது என்று அர்த்தம்.

உடனடியாக பலாப்பழத்தை வெட்டத் திட்டமிடவில்லை என்றால் பச்சை நிறத்தை தேர்வு செய்யவும். அறை வெப்பநிலையில் வைத்து இயற்கையாக பழுக்க வைக்கவும்.

சமையல்காரர் சரண்ஷ் கோயிலா அதிக தொந்தரவு இல்லாமல் பலாபழத்தை வெட்டுவது எப்படி என்பது தொடர்பான குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலில், கிச்சன் கவுண்டரில் செய்தித்தாள்களை பரப்பவும், இதனால் பழத்தில் இருந்து வரும் சாறு தரையின் மேற்பரப்பைக் கெடுக்காமல் இருக்கும்.

அதன்பின் உங்கள் கைகள் மற்றும் கத்தியில் பசை ஒட்டாமல் இருக்க  எண்ணெயை் தடவவும்.

முதலில் பலாப்பழத்தின் மேல் விளிம்பை வெட்டி, சாற்றை ஒரு துணியால் துடைக்கவும். பின்னர் பழத்தை செங்குத்தாக சமன் செய்யும் வகையில் மற்ற விளிம்பை வெட்டுங்கள்.

அதன் பின்னர் கூர்மையான கத்தியால் தோலை உரிக்கவும். இந்த செயல்முறைக்கு ரொட்டி கத்தி சிறப்பாக செயல்படுகிறது.

அனைத்தும் நீக்கப்பட்டதும், அதை மையத்திலிருந்து இரண்டு பகுதிகளாக வெட்டவும். வெள்ளை நிற சாற்றை ஏதேனும் துணி அல்லது டிஷ்யூ பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

தொடர்ந்து கத்தி மற்றும் கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டே அவற்றை நறுக்கவும்

பெரிய பீன்ஸ் போல தோற்றமளிக்கும் விதைகளை சமைத்து, வேகவைக்கலாம் அல்லது வறுக்கலாம்.

எல்லா பக்கங்களிலும் தாராளமாக எண்ணெய் தடவி, செய்தித்தாளில் போர்த்திய பிறகு, மீதமுள்ளவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

நீங்கள் ஒரு பழுத்த பழத்தை வெட்டுகிறீர்கள் என்றால், நீங்கள் நேரடியாக மேல் இருந்து மென்மையான பகுதிகளை வெட்டி எடுத்து அதை சாப்பிடலாம், கோயிலா பரிந்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.