இந்திய செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய 6 காரணங்கள்: பட்டியலிட்ட பிரதமர் மோடி

செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்க்கும் சிறந்த நாடாக இந்தியா திகழ்வதற்கு ஆறு முக்கிய காரணங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முதலாவதாக 1.3 பில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்களை இணைப்பதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உள்ளார்ந்த நிதிசேவை, வங்கியியல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியில், அண்மையில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “சுகாதாரம் மற்றும் குடும்பநலம் முதல் உள்ளடக்கிய மற்றும் அதிகாரம் அளித்தல் வரை அனைத்து வகையான ஆளுகையிலும் வாழ்க்கையை மாற்றியமைக்க நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்” என்று விளக்கினார்.
இரண்டாவதாக, ஆறு லட்சம் (600 ஆயிரம்) கிராமங்களை, அகன்ற கற்றை தொழில்நுட்ப அடிப்படையில் 5ஜி, ஐஓடி மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பம் போன்றவை மூலம், “அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது” என்று மோடி தெரிவித்தார். செமிகான் இந்தியா மாநாடு 2022-ஐ காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தொடக்க விழாவில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
PM Modi sees THESE 6 reasons why India is an attractive investment  destination for Semi-conductor tech
“உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது. இந்தியாவின் சொந்த செமிகண்டக்டர் பயன்பாடு 2026-ல் 80 பில்லியன் டாலரையும், 2030-ல் 110 பில்லியன் டாலரையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என மூன்றாவது காரணத்தை மோடி விளக்கினார்.
நான்காவதாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதை மேம்படுத்த விரிவான சீர்த்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 25,000-க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகளை ஒழித்தது போன்ற நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், உரிமங்களை தானாக புதுப்பித்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வாயிலாக முறைப்படுத்தும் கட்டமைப்புகள விரைவுபடுத்துதல் மற்றும் உலகிலேயே மிகவும் சாதகமான வரிகட்டமைப்புகளில் ஒன்றாக இந்தியாவை திகழச் செய்து வருவதாகவும் கூறினார்.
ஐந்தாவதாக, திறன் மேம்பாட்டில் அதிக முதலீடு மற்றும் 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். “செமிகண்டக்டர் வடிவமைப்பு திறன்மிகுந்தவர்கள் நம்மிடையே பெருமளவில் உள்ளனர், இது உலகளவிலான செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களில் 20% ஆகும். ஏறத்தாழ முதல் 25 செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், அவற்றின் சொந்த வடிவமைப்பு அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நம்நாட்டில் கொண்டுள்ளன” என்று மோடி தெரிவித்தார்.
PM Modi Hails India as an Investment Destination for Semiconductors Tech -  Youthistaan
ஆறாவதாக, இந்திய உற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். “நூற்றாண்டில் ஒருமுறை ஏற்படக்கூடிய பெருந்தொற்று பாதிப்பை மனிதகுலம் எதிர்கொண்டு வரும் வேளையில், நமது மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
“உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை” திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் இந்த திட்டத்தின் மூலம் 14 முக்கிய துறைகளில் 26 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊக்கத் தொகையை வழங்கிவருவதாக தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை வரலாறு காணாத வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார். 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த மதிப்பீட்டில் செமி- கான் இந்தியா திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டதையும் மோடி சுட்டிக்காட்டினார். செமி கண்டக்டர் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
semiconductors scheme: Cabinet clears Rs 76,000-cr incentive scheme for  semiconductors - The Economic Times
செமிகான் இந்தியா மாநாடு 2022 தொடக்கவிழாவில் மத்திய அமைச்சர்கள், செமிகண்டக்டர் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்ற பிரதமர், இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தற்போதைய உலகில் செமி கண்டக்டர்களின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டிய அவர், “ உலகளாவிய செமிகண்டக்டர் வினியோக சங்கிலியில் இந்தியாவை முக்கிய பங்குதாரர் நாடாக மாற்றுவதே நமது கூட்டு நோக்கம். உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற நாம் விரும்புகிறோம்” என்றார்.
அரசின் உதவி தேவைப்படுவதை ஒப்புக்கொண்ட பிரதமர், வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். “தொழில்துறை கடினமாக பாடுபட்டால், அரசு அதைவிட மேலும் கடினமாக பாடுபடும்”என்றும் அவர் கூறினார்.
Semiconductors consumption in India projected to cross $80 billion by 2026: PM  Modi
புதிய உலக நடைமுறை உருவாகி வருவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். “வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆதரவு கொள்கை சூழல் வாயிலாக இயன்ற அளவுக்கு முரண்பாடுகளை உங்களுக்கு சாதகமாக்கி வருகிறோம். இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம்”என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இதற்கிடையே, குவால்காம் குழுமத்தின் அங்கமான குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக குவால்காம் செமிகண்டக்டர் வழிகாட்டுதல் திட்டம் 2022-ஐ தொடங்கி நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வழிகாட்டுதல், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் இதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அறிவியல் அமைப்பான சி-டாக் உடன் குவால்காம் இந்தியா ஒத்துழைப்பை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் கீழ், சி-டாக் மற்றும் குவால்காம் இந்தியா ஆகியவை பின்வரும் நோக்கங்களை நோக்கிச் செயல்பட விரும்புகின்றன:
* இந்திய சூழலியலில் செமிகண்டக்டர் வடிவமைப்பிற்குத் தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அறிவுசார் சொத்து சார்ந்த கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு.
* கண்டுபிடிப்புகளில் அபாயங்களைக் குறைக்க உதவிகள்; வணிக வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துதல்; மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள இந்திய ஸ்டார்ட்அப்-களின் திறன்களை மேம்படுத்துதல்.
* துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டு அமைப்புகள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுடனான ஸ்டார்ட் அப்களுக்கான அணுகலை எளிதாக்குதல்.
* எதிர்காலத்தில் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலிகளை உருவாக்க அல்லது பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைக் கொண்ட உயர்-வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் தளங்கள் மற்றும் மன்றங்களை உருவாக்குதல்.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.