எஸ்.ஏ.சி நாடகத்தில் இளையராஜா மெட்டு: அடடே… அப்புறம் இந்தப் பாட்டு சினிமாவில் செம ஹிட் ஆனதே..!

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்ஏ.சந்திரசேகர். தற்போது படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல், படங்களில் தொடர்ந்து தனது நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், யார் இந்த எஸ்ஏசி என்ற யூடியூப் சேனல் தொடங்கியுள்ள இவர், தனது வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். எபிசோடு எபிசோடுகளாக வெளியாகும் இந்த வீடியோ பதிவில் தற்போது 9-வது எபிசோடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பேசும் எஸ்ஏசி, தன்னுடைய முதல் நாடகம் பிஞ்சு மனம் என்றும், நீலண்டன் தயாரித்த இந்த நாடகத்தை கதை திரைக்கதை எழுதி நான் இயக்கினேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் , 4 குழந்தைகளை மையமாக வைத்து எடுக்ககப்பட்ட இந்த நாடகத்திற்கு இசையமைத்தது யார் என்று கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அளித்துள்ள அவர், இசைஞானி இளையராஜா தான் என் நாடகத்திற்கு இசையமைத்தார் என்று கூறியுள்ளார். இந்த நாடகத்திற்காக இளையராஜா அருமையான ஒரு மெலடி சாங் கொடுத்தார். அதை நான் பாடினால் நன்றாக இருக்காது என்று சொல்லி, என் மனைவியை பாட சொன்னேன்.

இந்த பாடல் ரொம்ப அருமைாக இருந்ததது. பின்னாளில் இந்த பாடலை இளையராஜா படத்திற்காக பயன்படுத்திக்கொண்டார். கண்ணன் ஒரு கை குழந்தை என்று தொடங்கும் அந்த பாடல் ரொம்ப அருமையான மெலடி என்று கூறியுள்ளார். 1970-களில் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்று இளையராஜா முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

அந்த காலக்கட்டத்தில் நான் இயக்குநராக வேண்டும் என்று முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன். அந்த காலககட்டங்களில் தான் அந்த நாடகத்தை தொடங்கினோம். அப்போது இளையராஜா தனது சகோதரர்களுடன் வாயப்பு தேடி வந்தார். அவர் ஒரு குட்டி ஞானி அதிகம் பேசமாட்டார். அவர் அவரின் ஹார்மோனியம் அந்த இசை இதை தவர வேறு எதுவும் இ்ல்லை எனறு கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.