இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகள்: இந்திய உள்துறை அமைச்சகம்



தமிழ் நாட்டில் உள்ள 108 அகதி முகாம்களில் 58,843 இலங்கைத் தமிழ் அகதிகளும்
முகாமிற்கு வெளியே 34,135 இலங்கை அகதிகளும் ஒடிசாவில் 54 இலங்கை அகதிகளும்
வாழ்ந்து வருவதாக இந்திய உள்துறை அமைச்சகம் 2020-21 ஆண்டு அறிக்கையில்
தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் 72,312 திபெத்திய அகதிகள் வாழ்ந்து வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, ஜூலை 1983 முதல் ஆகஸ்ட் 2012 வரையிலான
3,04,269 இலங்கை அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

அவ்வாறு இந்தியாவுக்குள் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி
அனுப்பும் இறுதி நோக்கத்துடன் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு நிவாரணம்
வழங்குவதே இந்திய அரசின் அணுகுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1995ம் ஆண்டு வரை 99,469 அகதிகள் இலங்கைக்கு திருப்பி
அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அதன் பிறகான காலத்தில் திட்டமிடப்பட்ட வகையிலான
திருப்பி அனுப்பும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும்
கூறப்பட்டுள்ளது.

சில அகதிகள் அவர்களாகவே இலங்கைக்கு திரும்பி விட்டனர் அல்லது
சிலர் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.