இஸ்லாமியர்களை ஒழிக்க முயற்சி நடக்கிறது: ஓவைசி

ஐதராபாத் :

அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நேற்று ஐதராபாத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு நடத்தினார். அதன்பினர் மதவழிபாட்டு தளத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அவர் பேசுகையில், டெல்லி, மத்தியபிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் குறிவைத்து இடிக்கப்படுவதன் மூலம் நாட்டில் இருந்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் ஒழிக்க முயற்சிகள் நடக்கிறது என கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் அவர்களுக்கு நடத்த அநீதிகளை பற்றி என்னிடம் கூறுகின்றனர். கிராமங்கள், கடைகள் இடிக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையை இழக்க வேண்டாம். கவலைப்படவேண்டாம். நாம் அமைதி மூலம் இதை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், நாம் வீடுகளை இடிக்கக்கூடாது.

மோடி, அமித்ஷா கேளுங்கள். நாங்கள் உங்களுக்கு தலைவணங்க வேண்டும். கடவுள் அல்லாவுக்கு (இஸ்லாமிய மதகடவுள்) மட்டுமே நாங்கள் தலைவணங்குவோம். கடவுள் அல்லா மட்டும் எங்களுக்கு போதுமானவர்’ என்றார்.

மத்தியபிரதேசத்தின் ஹர்ஹோன் பகுதியில் நடந்த வன்முறை மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசிய ஓவைசி, இஸ்லாமியர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறமாட்டார்கள். மரணத்தை பார்த்து அவர்களுக்கு பயம் இல்லை. கடவுள் அல்லா எங்கள் உயிரை எடுத்தால் நாங்கள் மரணிப்போம். அவர் எடுக்கவில்லை என்றால் நாங்கள் வாழ்வோம். நீங்கள் (பாஜக) எங்கள் வீடுகளை இடித்துள்ளீர்கள்.  நாங்கள் காத்திப்போம். ஆனால் கடவுள் அல்லா காத்திருக்கமாட்டார்.

டெல்லி, ஹர்ஹோனில் என்ன நடந்ததோ நாங்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு உதவி செய்வோம். உதவி செய்யவில்லை என்றாலும் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் நாம் பிரார்த்தனை செய்வோம்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அலையை பாஜக கொண்டுவந்துள்ளது. ஆனால், நீங்கள் அமைதியாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும். இந்த அநீதியை சட்டப்படி நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். நாம் ஆயுதங்களை எடுக்கவேண்டுமென நம்மை பாஜக ஒடுக்க நினைக்கிறது. நமது ஆயுதங்கள் என்னவென்று தெரியுமா. பிரார்த்தனை செய்வது தான் நமது ஒரே ஆயுதம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.