புதுக்கோட்டையில் 121 சவரன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வந்த மனோன்மணி என்பவர் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்குடிக்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள 121 பவுன் நகை திருடு போயிருந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொள்ளை போன நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.