அதிமுகவில் நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தலின் முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய விதிகளின்படி அதிமுகவில் பகுதி, நகர, பேரூர், செயற்குழு உறுப்பினர்க்ள, பொதுக் குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என்று பல்வேறு பொறுப்புகளுக்கு உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றன.
இந்தத் தேர்தல்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். உட்கட்சித் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது. மே மாதத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறக் கூடும் என்று தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பை அதிமுக தலைமை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றைத்தலைமை, இரட்டைத் தலைமை, சசிகலா விவகாரம், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே பூசல் என பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளது அதிமுக.
இதையும் படிக்க:”இளங்காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியிருக்கிறேன்” – ஓ.பன்னீர்செல்வம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM