தெஹ்ரான்:
ஈரான் நாட்டில் வடக்கிழக்கில் மசாத் நகரத்தின் அமைந்துள்ள புனித தலமான இமாம் ரிசா ஆலயத்தில் சுற்றுப்புற சுவர்களின் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயமில்லை என கூறப்படுகிறது.
சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தீப்பற்றி அது ஆலயத்திலும் பரவியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நாட்டை சேர்ந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தெஹ்ரானின் தலைநகரில் இருந்து வடகிழக்கே சுமார் 900 கிலோமீட்டர்கள் (560 மைல்கள்) தொலைவில் இருக்கும் இந்த ஆலயம் கல்லறை அமைந்துள்ள மிகப்பெரிய வளாகத்தை கொண்டது. மேலும் மக்கள் அதிகம் பார்வையிடும் தளங்களில் ஒன்றாகும். வருடத்திற்கு 2 கோடி மக்கள் ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ஆலயத்துக்கு வருகை தருகின்றனர்.