கோவையைச் சேர்ந்த இளைஞருக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த முத்துமாரியப்பனும், அந்த நிறுவனத்தில் கணக்காளராக இருக்கும் வால்மி இனாங்காவும் காதலித்துள்ளனர். காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், தமிழர் பாரம்பரியப்படி திருமணம் செய்து கொள்ள இனாங்கா விரும்பியுள்ளார்.
அதன்படி, கோவை – துடியலூரில் நடைபெற்ற திருமணத்தில் இனாங்காவின் குடும்பத்தினர் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி – புடவையில் பங்கேற்றனர். பட்டுப்புடவையில் மண்டபத்துக்கு வந்த மணப்பெண் இனாங்காவுக்கு, பூப்பந்தல் வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமேடையில் வேத மந்திரங்கள் முழங்க இனாங்காவுக்கு, முத்துமாரியப்பன் தாலி கட்டினார். மாலை மாற்றிக் கொண்ட பின்னர் அம்மி மிதித்த இனாங்காவுக்கு, மணமகன் மெட்டி அணிவித்தார். பின்னர், கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் அணிவித்துக் கொண்டனர்.
இதையும் படிக்க: திருமணத்துக்கு குடித்துவிட்டு வந்த மாப்பிள்ளை – சினிமா பாணியில் அதிரடி முடிவெடுத்த தந்தை Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM