Tamil Nadu News Updates: நாகப்பட்டினத்தில் திருச்செங்காட்டங்குடி தேர் திருவிழாவில் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழப்பு
இலங்கைக்கு ரூ123 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்பும் ஸ்டாலின்
இலங்கை மக்களுக்கு உதவிகளை அனுப்ப சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம். ரூ123 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்ப தயார் என அறிவிப்பு
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மே முதல் வாரத்தில் வெப்ப நிலை எச்சரிக்கை
டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயி், மே முதல் வாரத்திலேயே நாடு முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஐபிஎல்: லக்னோ அணி வெற்றி
ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி. புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்.
சட்ட மன்றங்கள் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு சிறப்பான நீதித்துறை அமைப்புக்கு வழிவகுக்கும். நீதித்துறையை வலுப்படுத்த அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று முதல்வர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னையில் இயங்கும் நிசான் மோட்டார் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிறுவனம் மூடப்படுவதால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
தேனி ரேஷன் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் 18 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது.
நாகை திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் தீபராஜன் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவித்தார்
சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ15 லட்சம் பணம் இழந்த தனியார் நிறுவன முன்னாள் ஊழியர் பிரபு, வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை.
அனல்மின் நிலையங்களுக்கு கூடுதல் சரக்கு ரயில்களில் நிலக்கரியை விரைந்து அனுப்ப, நாடு முழுவதும் சுமார் 600க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டம். முதற்கட்டமாக 43 பயணிகளை ரயில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம்
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு இன்று நேரில் ஆய்வு. களிமேடு பகுதியில் வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இன்றும், நாளையும் ஆய்வு. கடந்த புதன்கிழமை களிமேடு பகுதியில் தேரில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழப்பு
வட சென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம். ஏப்ரல் 26ம் தேதி வல்லூர் அனல்மின் நிலைய 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
டெல்லியில் இன்று முதல்வர்கள், தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்கவுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர மீண்டும் சீனா வரலாம் என்று சீன அரசு அறிவிப்பு