முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற கூட்டு கருத்தரங்கம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி:

நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 ஐகோர்ட்டு நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல். சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில முதல் மந்திரிகள், அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு கூட்டு கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடந்தது.

முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற இந்த தேசிய கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோரும் உரையாற்றினார்கள்.

யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதல்மந்திரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் இதில் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்… ராணுவ துணை தலைமை தளபதி நாளை பொறுப்பேற்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.