தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளது.
வரும் திங்கட்கிழமை மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை எனவும் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கூட்டங்களிலும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதே போல, பொது போக்குவரத்தில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டுமென்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்குமெனவும் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவில் இம்மாத தொடக்கத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு, உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.