மூன்றாம் திகதி விழிப்புடன் இருக்கவும்! அனுர எச்சரிக்கை (Photo)


மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க  எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக  சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது. 

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள்  தொடர்பான கோப்புக்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார். 

குறித்த பதிவில் ‘உரிமையாளர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்’ என பதிவிட்டுள்ளார். 

 தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக சமகால அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், குறித்த ஆவணங்கள் ராஜபக்ச அரசாங்கத்தினை கவிழ்க்க கூடிய ஆவணங்களாக இருக்கலாம் என சமூக வலைத்தள வாசிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.  

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.