ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் டலகேட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் தாக்கியதில் சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 17 சுற்றுலாப் பயணிகளும், 22 உள்ளூர்வாசிகளும் அடங்குவர்.
காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை, எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கவால்ஜீத் சிங், நாய் கடியால் பாதிக்கப்பட்ட 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
நகரில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. வெப்ப நிலை அதிகரிப்பு எதிரொலி- மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறையை அறிவித்தது பஞ்சாப்