மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும்
வாட்ஸ்அப்
மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் பகிரும் வசதியை அளித்து வருகிறது. உலகளவில் பெரும்பாலான மக்கள் இதன் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நிறுவனங்களும் தளத்தை மேம்படுத்த பல வசதிகளை நிறுவி வருகிறது.
சமீப காலமாக, வாட்ஸ்அப் அதன் வெப் பதிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. தற்போது புதிய அப்டேட்டை நிறுவனம் சோதனை செய்து வருவதாக WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்
இன்ஸ்டாகிராம்
தனது ஸ்டோரிகளுக்கு எமோஜி மூலம் விரைவாக பதிலளிக்க உங்களை அனுமதிக்கிறது. அதே போன்ற அம்சத்தினை முதலில் வாட்ஸ்அப் வெப் தளங்களில் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு எளிதாக ரிப்ளை கொடுக்க 8 எமோஜிகள் கொண்ட ஈமோஜி பேனலை நீங்கள் காண முடியும்.
அறிக்கையில் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின்படி, டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது, ஸ்டேட்டஸ்களுக்கு உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்க 8 எமோஜிகள் கொடுக்கப்படும். ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படும் ஈமோஜிகள் இன்ஸ்டாகிராம் செயலியைப் போலவே உள்ளன. அவை, இதயம்-கண்களுடன் சிரிக்கும் முகம், ஆனந்தக் கண்ணீருடன் முகம், திறந்த வாய், அழும் முகம், மடிந்த கைகள், கைதட்டல் கைகள், பார்ட்டி பாப்பர், நூறு புள்ளிகள் ஆக இருக்கும்.
வாட்ஸ்அப் ஸ்டேடஸுக்கு நீங்கள் இப்படி பதிலளித்தால், அவை அரட்டையில் செய்தியாக காட்சி அளிக்கும். இந்த அம்சம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. சோதனை முயற்சியில் இருக்கும் இது, விரைவில் பயனர்களுக்கு அப்டேட் மூலம் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Smart Bottle: ஸ்மார்ட் பாட்டிலை விற்கும் ஆப்பிள் – விலை எவ்வளவு தெரியுமா?
பல போன்களில் வாட்ஸ்அப்
பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த, பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தினை சேர்க்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதன்மையாகப் பயன்படுத்தும் போனில் இணைப்பு இல்லாவிட்டாலும், வேறு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்ய முடியும்>
இந்த அம்சமானது சில பயனர்களுக்கு சோதனை முயற்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது. பயனர்கள் ஒரு வாட்ஸ்அப் கணக்கை, கூடுதலாக நான்கு கேட்ஜெட்டுகளுடன் இணைக்க முடியும். முன்னதாக, பல பிரவுசர்களில் வாட்ஸ்அப் வெப் சேவையை அனுபவிக்கும் வசதியை நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!
வாட்ஸ்அப் பேமெண்ட் கேஷ்பேக்
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால், ரூ.11 வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சலுகையைப் பெற குறைந்தபட்சம் 30 நாள்களாவது வாட்ஸ்அப் பேமண்ட் சேவையை பயன்படுத்தி இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கேஷ்பேக் ரிவார்டுகளை வழங்குவதற்கான சோதனையை வாட்ஸ்அப் இந்தியாவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்கள் வரை நீட்டிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்தது.