புதுச்சேரியில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது, டிப்பர் லாரி பின்பக்கமாக அதிவேகமாக மோதியதில், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சேரியில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
நள்ளிரவில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் அந்த லாரி சென்றுக் கொண்டிருந்த போது, அபிஷேகபாக்கத்தில் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஜல்லி லோடு லாரியின் மீது பின்பக்கமாக மோதியுள்ளது.
ஏற்கனவே அதிக பாரத்துடன் சென்றுக் கொண்டிருந்த லாரி, பின்னால் வந்த லாரி மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்த நிலையில், ஜல்லிகள் சாலையில் சிதறின.