Senior Citizen Savings Scheme Interest: சீனியர் சிட்டிசன்கள், தங்கள் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை, ஃபிக்சட் டெப்பாசிட் அல்லது ரெக்கரிங் டெப்பாசிட்டில் முதலீடு செய்து, நிலையான வருமானத்தை மாதந்தோறும் பெறுவார்கள். குறிப்பாக, 60 வயதை எட்டிய நபர்கள், பங்குசந்தையில் ஆபத்து இருப்பதால், அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களை தேடுவார்கள்.
அந்த வகையில், முதியோர்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளது. 60 வயதை எட்டிய இந்தியர்கள், இந்த திட்டத்தில் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல நிலையான வருமானத்தை பெறலாம்.
சீனியர் சிட்டிசன்கள் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்த கணக்கில் குறைந்தப்பட்சமாக ஆயிரம் ரூபாய் டெப்பாசிட் செய்யலாம். அதிகப்பட்சமாக 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்களை காட்டிலும் அதிகப்படியான வட்டியை இதில் பெறலாம். வட்டியானது ஒவ்வொரு காலாண்டில் செலுத்தப்படும். அதாவது, மார்ச் 31,ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 வட்டி செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 5 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் கூடுதலாக மூன்று ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம்.
கணக்கு தொடங்கி ஓராண்டிற்குள் மூடிவிட்டால், எத்தகையும் வட்டியும் செலுத்தப்படாது. வட்டி தொகை காலாண்டு முடிவில் செலுத்தப்பட்டிருந்தாலும், திரும்பி பெறப்படும்.
கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடையும் பட்சத்தில், அந்நபர் இறந்த தேதியிலிருந்து அந்த கணக்கு சாதாரண கணக்காக மாற்றப்பட்டு, சேமிப்பு கணக்கான வட்டியே டெப்பாசிட் செய்யப்படும்.
சீனியர் சிட்டிசன் திட்டம் தகுதி விவரங்கள்
- 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- 55 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வுப்பெற்ற சிவில் பணியாளர்கள், ஓய்வூதிய பலன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்யப்பட வேண்டும்
- 50 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற பாதுகாப்பு துறை பணியாளர்களும் SCSS கணக்கில் பதிவு செய்யலாம். அவர்களும், ஓய்வூதிய பலன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்ய வேண்டும்