கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய 3 கோல் மீன்கள், இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
சக்தி குளங்கரை பகுதியை சேர்ந்த மாணு என்ற மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவரது வலையில் மூன்று பெரிய கோல் மீன்கள் சிக்கியுள்ளன.
இந்த வகை மீன்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவை என்பதால் அதிக விலைக்கு போவது வழக்கம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த மூன்று கோல் மீன்களை வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டு கொண்டு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி சென்றனர்.