சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலிருக்கும் 9 முகங்களை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இமேஜை பகிரும் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஜெனரல் குடும்பத்தை குறித்த இந்த ஓவியம், மிகவும் பிரபலமான ஆப்டிக்கல் இல்யூஷனாகும். ஆக்டேவியோ ஒகாம்போவா உருவாக்கிய இந்த ஓவியத்தில், 9 முகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒருசிலவற்றை எளிதாக கண்டறியலாம். ஆனால், அனைத்தையும் கண்டறிய நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
- ஓவியத்தில் உள்ள மிகப்பெரய படம் ஜெனரலின் முகத்தை குறிக்கிறது.
- அவரது கண்கள் பகுதியை பார்த்தில், அதில் தொப்பி அணிந்த முதியவரை காண முடியும்.
3.ஜெனரிலின் காதுப்பகுதியில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நிற்கும் மாயத்தோற்க்கை காண முடியும்.
- ஜெனரல் முகத்தின் வலதுபுறத்தில் உள்ள மதில் சுவரில் ஒரு பெண்ணின் முகம் உள்ளது.அது அவரது மனைவியாக இருக்கலாம்.
- வளைவின் மறுபுறத்தில் ஒரு காகம் ஒரு கல் திட்டத்தில் அமர்ந்திருக்கிறது, அதன் பின்னால் நீங்கள் நான்கு முகங்களைக் காணலாம்.
9 முகங்களையும் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் சிறந்த கண்காணிப்புத் திறனைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.