தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தியின் சர்தார்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் .