சினிமா ஆர்வத்தால் வீட்டைவிட்டு ஓடி வந்த ஷாலினி பாண்டே
2017-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் '100% காதல்', 'கொரில்லா', 'சைலன்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற ஹிந்தி படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஷாலினி பாண்டே பேசும்போது, “நான் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். நானும் அவருக்காக படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதற்காக வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். மனதுக்கு கஷ்டம் தான். ஆனால் இப்போது பெற்றோர்கள் என்னை பெருமையாக நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார் .