ஈரோட்டில் சாலையின் குறுக்கே தொங்கிக்கொண்டிருந்த கேபிளை இழுத்து போக்குவரத்தை சரிசெய்த சிறுவர்களை டிஎஸ்பி பாராட்டியதுடன் எச்சரித்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து கரூர், பழனி, மதுரை உள்ள பல மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக கொல்லம்பாளையம் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இச்சாலையில் தொலைக்காட்சி கேபிள் அறுந்து கிடந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பள்ளி சிறுவர்கள் மூவர் கேபிளை இழுத்து போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் உயரம் அதிகமுள்ள லாரிகளின் மேல் ஏறி உதவியும் செய்தனர். சம்பவம் அறிந்து வந்த போக்குவரத்து துணை ஆய்வாளர் விஜயகுமார் போக்குவரத்தை சீர்செய்தார்.
மேலும் சிறுவர்கள் மூவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனையறிந்த நகர காவல் துணை கண்காணிப்பாளர் அனந்தகுமார், சிறுவர்களை அழைத்து இதுபோன்ற சம்பவங்களில் பெரியவர்கள் இன்றி கேபிள்களை தொடக்கூடாது என்றும், இதுகுறித்து அருகில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் சாலையில் போக்குவரத்தை சீர் செய்தமைக்கு சிறுவர்களை பாராட்டி மகிழ்ந்தார். தெற்கு ஆய்வாளர் விஜயா உடனிருந்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM