டெஸ்லா பங்குகள் விற்பனை மூலம் எலான் மஸ்க் 8.5 பில்லியன் டாலர் நிதி திரட்டல்

ட்விட்டரை கைப்பற்றும் திட்டத்தில், மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் 8 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெஸ்லாவின் 96 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார். டெஸ்லாவின் 5 புள்ளி 6 சதவீத பங்குகள் விற்பனையான நிலையில் மேற்கொண்டு பங்குகளை விற்கும் திட்டமில்லை என எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரை கையகப்படுத்தும் திட்டத்தில் தன் பங்கிற்கு 21 பில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளதாக மஸ்க் கூறிய நிலையில் இதர 12 புள்ளி 5 பில்லியன் டாலர் நிதி பங்கீடு குறித்த தகவல்களை உடனடியாக வெளியிடவில்லை.

நிதி சுமைகளை குறைக்க பங்குதாரரை தேடி வரும் மஸ்க், தன் மற்ற நிறுவனங்களின் பங்குகளை விற்று ஈடுகட்டி வருகிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.