குஜராத் அணிக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்!

IPL 2022 GT vs RCB Live Cricket Score in tamil: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது.

9 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது பெங்களூரு அணி. அந்த அணி கடைசி இரு ஆட்டங்களில் முறையே ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம் படுதோல்வியை தழுவியது. இதனால், இன்று வெற்றிப்பாதைக்கு திரும்ப பெங்களூரு அணி முனைப்பு காட்டும்.

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:

ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்

Indian Premier League, 2022Brabourne Stadium, Mumbai   30 April 2022

Gujarat Titans 

vs

Royal Challengers Bangalore   110/2 (14.1)

BowlersORWKT
Pradeep Sangwan *3.1122
Lockie Ferguson3260
BatsmanRB
Virat Kohli55 49

Play In Progress ( Day – Match 43 ) Royal Challengers Bangalore elected to bat

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.