திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் மொய்தீன். இவர் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை அங்குள்ள மசூதிக்கு மொய்தீன் சென்றார். தொழுகை முடிந்ததும் அங்கிருந்தவர்கள் வெளியேறினர். அப்போது மொய்தீன் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் பலியானவர் மொய்தீன் என தெரியவந்தது.
போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. மொய்தீன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை சுட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மசூதிக்குள் நடந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.