கொரோனா சூழலில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இன்னும் 12 ஆண்டுகள் ஆகக் கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்து ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனா சூழலில் மூன்றாண்டுகளில் 52 இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த இழப்புகளை 2034 – 2035 நிதியாண்டில் தான் ஈடுசெய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.