திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.